சினிமா துறையையும் மற்றும் மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயமாக பல மக்களிடம் பேசப்பட்டு வந்த நிகழ்வாக இருந்து வந்தது வனிதா பீட்டர் பால்.வனிதா அவர்கள் பல போரட்டங்களை தாண்டி தனது காதலரான பீட்டர் பால் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.அனால் அதற்கு முன் முன்னால் மனைவியான எலிசபெத் அவர்கள் பீட்டர் பால் அவர்கள் மீது போலீசாரில் வழக்கு பதிவு செய்து இருந்ததும்.இந்நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டாக சமுக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றனர்.மேலும் அதில் தற்போது இதுவரை பேசாமல் இருந்த வனிதா அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.காதலில் நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைவது தான் மிகவும் வேதனையாகவும் தாங்க முடியாமலும் இருக்கிறது.உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது.அதை நான் எதிர்கொண்டே ஆகா வேண்டும்.இது நடந்து இருக்க கூடாது என நான் சொல்லவில்லை. ஏனென்றால் கண்டிப்பாக வாழ்க்கை ஒரு பாடம்.நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.நான் மன உறுதியோடு தைரியமாக தான் இருக்கிறேன்.
போலி செய்திகளை படித்துவிட்டு நீங்களாக ஏதாவது பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.நான் எந்த தவறும் செய்யவில்லை.அதனால் என்னை திட்டுவது சரியில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை நான் கொடுத்தேன்.என் கனவுகள் வாழ்க்கையின் நம்பிக்கை எல்லாம் நொறுங்கும் நிலையில் நான் இருக்கிறேன்.நான் பாசிட்டிவாக இருந்தாலும் பயமாக இருக்கிறது”.இதை நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன்.அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன் என்று என கூறியுள்ளார்.மேலும் அதை வனிதா ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 20, 2020