தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை வனிதாவிஜயகுமார்.இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் அதன் பிறகு இவர் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அப்போது உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் பிரபல முன்னணி நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் ஆவார்.நடிகர் விஜய்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் 70மற்றும் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர்.இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் இவருக்கு அந்நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.மேலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இவர் பங்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது நடிகையாக ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.மேலும் இவர் நடிக்கும் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
Pooja today…filming starts… pic.twitter.com/c0Ev0AjRYv
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) February 27, 2021