சினிமாவைபொறுத்தவரை நடிகைகள் படத்தைவிடநேரில் சுமாராகவே இருப்பார்கள். ஆனால் ஸ்வர்ணா நிஜத்தில் செம யூத்தாக இருக்கிறார் .இந்த பெயரை எங்கோ கேட்பது போல் இருக்கிறதா.இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் சந்திரமுகி.இதில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவர்தான் ஸ்வர்ணா.இவர் முழுபெயர் ஸ்வர்னா மேத்யு.பி வாசு இயக்கத்தில் ரஜினி,ஜோதிகா,நயன்தாரா,பிரபு, நாசர் போன்ற நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தனர். இந்தப்படத்தில் திகிலுக்கு இணையாக வடிவேலு ஸ்வர்னாவின் காமெடியும் பலமாக அமைந்தது .இப்படம் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூல் சாதனை படைத்தது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்வர்ணா 1992 இல் “மிஸ் கேரளா” பட்டத்தை வென்றார். இதன் மூலம் தமிழில் வெளியான ‘தாய்மனசு’ படத்தில் 1995ல் நாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழில் மாயாபஸார், கோகுலத்தில்சீதை, பெரியதம்பி என்று பல படங்களில் நடித்தார்.
நாயகி வாய்ப்பு குறைய சினிமாவில் சிறு சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ்மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் மாயாமச்சிந்திரா, சதுரங்கம், என்று பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சியான இளமையான போட்டோவை போட்டுக் கொண்டிருந்த ஸ்வர்ணா மேத்யூ, வர்கீஸ் ஜாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குடும்பப் பெண்ணாக மாறியஸ்வர்னாவிற்கு ஒருமகனும் ஒருமகளும் இருக்கின்றனர்.
Home சினிமா செய்திகள் சந்திரமுகி படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது??அடேங்கப்பா என்ன மாடர்ன் அம்மாவா இருக்காங்க!! இவருக்கு...