தமிழ் சினிமாவில் முன்பு எல்லாம் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் காமெடி நடிகர்கள் தமிழில் இருந்து வந்தார்கள்.மேலும் இதில் 80 மற்றும் 90களில் தமிழ் சினிமா துறையை கலக்கி வந்த காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் என பலர் இருந்து வந்தார்கள்.மேலும் அதில் மக்களுக்கு புடித்த இன்று வரை அதிகப்படியான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு.இவர் 1988 ஆம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி என்னும் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.மேலும் இவர் அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்னும் படத்தில் நடிகராக அறிமுகமானார்.அந்த படத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை தொடர்ந்து வரிசையாக பல காமெடி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.இந்நிலையில் காமெடி நடிகராக மட்டுமே இருந்த இவர் 2006 ஆம் அண்டு வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் அவரின் நகைச்சுவை நிறைந்த நடிப்பில் மக்கள் கவலை மறந்து படம் வெற்றிநடை போட்டது.மேலும் அவர் இந்த படத்திற்காக சிறந்த காமெடியனுக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம்பார் விருதை பெற்றார்.
மேலும் அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் இடையில் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் இவர் இடையில் தற்போது படங்களில் நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வந்தது.
நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காமெடி நடிகர் மனோபாலா அவர்கள் தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.நீண்ட நாளுக்கு பிறகு இவரின் அண்மைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவன் வேறலெவல் என ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.
After a very long time with vadivelu pic.twitter.com/0HosFylofs
— Manobala (@manobalam) February 13, 2021