தமிழ் சினிமாவில் தற்போது பெரும் கேள்வி குறையாக இருந்து வருவது இந்த காமெடி கதாப்பாத்திரங்கள் தான.இப்போது உள்ள காமெடி நடிகர்கள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வில்லை என்றாலும் சில காமெடி நடிகர்கள் தனது திறமை மூலம் ரசிகர்கள் மனதை வென்று விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்கள் கோடி கட்டி பறந்து வந்துள்ள நிலையில் தற்போது மக்கள் அனைவரும் அவர்களுக்கு நிகராக எதிர்பார்த்து வருகிறார்கள்.அவர்களது இடத்தை தொட முடியவில்லை என்றாலும் அவர்கள் அவர்களுக்குள் இருக்கும் தங்களது காமெடி திறமைகளை மக்களிடம் வெளிக்காட்டி அவர்களை ரசிக்க செய்து வருகிறார்கள்.
காமெடியில் ஒரு உச்சத்தில் இருந்து வந்த நடிகரான காமெடி கிங் என்றே சொல்லலாம்.அவர் வேறு யாரும் இல்லை கவுண்டமணி அவர்கள் தான்.இவரது காமெடி காட்சிகள் இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.மேலும் இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்.
இவர் படங்களில் மட்டுமல்லாமல் எந்த ஒரு நிகழ்சிக்கும் போனாலும் அவர் தனது நகைச்சுவை பேச்சின் மூலம் அனைவரயுயும் கண்டிப்பாக கவர்ந்து விடுவார்.அந்த வகையில் தற்போது சிறந்த நடிகராக வளம் வருபவர் யோகிபாபு இவர் மக்கள் மத்தியில் தனது டைமிங் காமெடி மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காமெடி நடிகர்களை பற்றி பேசியுள்ளார்.அதில் குறிப்பாக கவுண்டமணி தனக்கு கொடுத்த அறிவுரை பற்றி கூறியுள்ளார் அதில் அவர் கூறுகையில் “தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியே அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க” உன்னோட இலக்கு மட்டும் தான் உன் கண்ணனுக்கு தெரியனும்” என கூறினார் இன்று வரை அவர் கூறியதை நான் கடைபிடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.அந்த செய்தியானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.