தமிழ் சின்னத்திரையில் தற்போது கோடி கட்டி பறந்து வரும் நிறுவனமாக பல இருந்து வருகின்றது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லவே வேண்டும்.அதிலும் குறிப்பாக பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வரும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.இந்நிலையில் தற்போது அதிகப்படியான மக்கள் மத்தியில் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்கள் கோமாளிகள் தான்.புகழ் பாலா ஷிவாங்கி மணிமேகலை சுனிதா என கோமாளிகளாக தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.
இப்படி ஒரு நிலையில் இந்நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.மேலும் அதில் பாபா பாஸ்கர் ஷகீலா கனி மற்றும் அஸ்வின் என நால்வர் தேர்வனர்கள்.இந்நிலையில் குக் வித் கோமாளி பைனல் படபிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிந்தது.
இந்நிலையில் இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் சிம்பு அவர்கள் பங்கு பெற்றுள்ளார்.மேலும் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என மக்கள் ஆர்வமாக பார்த்து வரும் நிலையில் இதன் முதல் இடத்தை தட்டிச்சென்றார் கனி ஷகீலா அவர்கள் இரண்டாவது இடத்தையும் மற்றும் அஸ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.மேலும் ரசிகர்களை கவர்ந்த பாபா பாஸ்கர் அவர்கள் இதில் எந்த ஒரு பட்டத்தையும் ஜெயக்கவில்லை என்பது தான் வருத்தம்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி பைனல் முடிந்தது-யார் வெற்றியாளர் தெரியுமா!! சிம்பு கையால் பட்டத்தை வென்ற போட்டியாளர்!!