விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கண்டிப்பாக இருக்கும்.அதில் பல நிகழ்ச்சிகள் தமிழ் மக்களின் பேவரெடாக தற்போதும் இருந்து வருகிறது.அந்த வகையில் தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது.இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் மற்றும் பரிட்சையமில்லாத பலர் கலந்து கொண்டார்கள்.கனி பாபா பாஸ்கர் அஸ்வின் ஷகீலா பவித்ரா தர்ஷா குப்தா மதுரை முத்து ஆகும்.அந்த வகையில் இதில் கலந்து கொண்டு அணைத்து பெண்களின் மனதை கவர்ந்தவர் அஸ்வின்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறைமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.இவர் ஏற்கனவே ரெட்டைவால் குருவி சீரியல் தொடரில் நடித்துள்ளார்.
இவர் அதனை தாண்டி சில வெள்ளித்திரை படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் அஸ்வின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.அதன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில் இதில் கலந்து கொண்டு பிரபலங்கள் மற்றும் அதன் கோமாளிகள் அனைவர்க்கும் வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது.தற்போது அஷ்வின் அவர்கள் புது படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும் அதில் பிரபல கோமாளியான புகழ் அவர்களும் இணைந்து நடிக்க போகிறார்கள்.அச்செய்தியை அஸ்வின் அவர்கள் தனது தட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
New movie with Ashwin pic.twitter.com/zxPgBOxvub
— Pugazh (@pugazh_iam) April 14, 2021