சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பு ஆகும் பல தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என மக்களை ஈர்த்து வருகிறது.மேலும் பல தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்போது பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு பல சீரியல் தொடர்கள் இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக மாறி வருகிறது.மேலும் இதில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை பெற்று வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்று முடிவடைந்தது.மேலும் இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் இதற்கு முன்பு நடந்து முடிந்த சீசன்களை விட இந்த சீசன் பெரும் வெற்றி பெற்றது. குக்வித்கோமாளி தற்போது மக்களை பெரிதும் ஈர்த்துள்ள நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.மேலும் அதில் கோமாளியாக இருக்கும் புகழ் பாலா சிவங்கி மற்றும் சுனிதா அவர்கள் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
மேலும் இதில் தற்போது போட்டியாளர்களாக இருக்கும் ஷகீலா அஸ்வின் பாபா பாஸ்கர் என பலர் கலந்து கொண்டு வருகிறார்கள்.மேலும் அதில் கோமாளிகளாக வளம் வரும் ஷிவாங்கி பாலா புகழ் மற்றும் மணிமேகலை என தங்களது நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைத்து வருகிறார்கள்.
இதில் பங்கு பெரும் போட்டியாளர்களின் சம்பள பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதில் ஷகீலாவிற்கு 50000 ரூபாயும் பாஸ்கர் மற்றும் மதுரைமுத்து அவர்களுக்கு 40000 ரூபாயும் அஸ்வின் 20000 புகழ் மற்றும் பாலாவிற்கு 15000 ரூபாயும் மணிமேகலை ஷிவாங்கி ,மற்றும் சுனிதாவிற்கு 20000 சம்பளம் வாங்கி வருகிறார்கள்.