தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பாகி மக்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.இந்நிகழ்ச்சிக்கு முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது.குக் வித் கோமாளி இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் முடிவடைந்த நிலையில் இதன் இறுதி போட்டியாளர்களாக கனி ஷகீலா பாபா பாஸ்கர் அஷ்வின் பவித்ரா ஆகிய ஐவரும் தேர்வானார்கள்.மேலும் அதனை தொடர்ந்து இதன் இறுதி போட்டியின் போது பிரபல நடிகரான சிம்பு அவர்கள் பங்குபெற்றுள்ளார்.இந்த சீசனில் கனி அவர்கள் முதல் இடத்தையும் ஷகீலா அவர்கள் இரண்டாவது இடத்தையும் மற்றும் அஷ்வின் அவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.பாபா பாஸ்கர் அவர்கள் இதில் எந்த இடத்தையும் புடிக்காதது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.பாபா பாஸ்கர் அவர்கள் கோமாளிகளுக்கு இணையாக குக் வித் கோமாளி செட்டில் படு ஜாலியாக இருப்பவர்.இவர் நடன இயக்குனராக தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் அறிமுகமானார்.
பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இந்நிலையில் பாபா பாஸ்கர் அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.பாபா பாஸ்கர் அவர்களுக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.மேலும் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அட பாபா பாஸ்கர் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?? வெளியான குடும்ப புகைப்படம்!! லைக்குகளை குவிக்கும்...