தமிழ் சின்னத்திரையில் தற்போது உள்ள பல நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பல சின்னத்திரை நடிகைகள் தற்போது போட்டோஷூட்களை நடத்தி அதன் மூலம் தமிழ் இளசுகளின் மனதில் இடம் பிடித்து விடுவதுண்டு.மேலும் அதனை தொடர்ந்து தற்போது உள்ள பல நடிகைகள் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி அதன் மூலம் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தங்கள் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் போட்டோஷூட்களின் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்து தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையை கலக்கி வரும் நடிகைகள் ரம்யாபாண்டியன் தர்ஷாகுப்தா ஷிவானி.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முள்ளும் மலரும் என்னும் தொடரில் நடித்து வருகிறார் தர்ஷாகுப்தா.அது மட்டுமல்லாமல் இவர் சன் தொலைகாட்சி யில் ஒளிபரப்பாகும் மின்னலே என்னும் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தர்ஷாகுப்தா அவர்கள் செந்தூரப்பூவே என்னும் சீரியல் தொடரிலும் நடித்து வருகிறார்.மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மனதை கொள்ளை கொண்டார்.
இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் நடிகைகள் தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் அவ்வபோது promotion நடத்தி வருவார்கள்.இந்நிலையில் நடிகை தர்ஷாகுப்தா அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் நான் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ப்ரோமோசன் செய்து ஏமாற்றிவிட்டேன் என ஒரு சிலர் என்ன திட்டுகிறார்கள்.மேலும் இந்த நிகழ்வை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட தர்ஷா நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை என்னிடம் சிலர் தங்களது புடவை கம்மல் போன்றவையை விளம்பரம் செய்ய கேட்பார்கள்.அனால் அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் செய்து தர முடியாது எனக்கு ஷூட்டிங் வேலை இருக்கும்.அதனால் என்னால் சரியாக வீடியோ போடாமுடியாது.அதனால் தான் பணம் வாங்காமல் இலவசமாக செய்து கொடுத்தேன்.உண்மை தெரியாமல் யாரையும் அசிங்கமாக பேச வேண்டாம் என கண்ணீருடன் பேசியுள்ளார்.அந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.
Home Uncategorized உதவி செய்ய போய் எனக்கு இந்த கெட்ட பேரா-நான் யாரையும் ஏமாத்துல!! கண்ணீருடன் தர்ஷா வெளியிட்ட...