தமிழ் சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் படையெடுத்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் அனைவரும் சின்னத்திரை தொலைக்காட்சியில் சீரியல் தொடர்களிலோ அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலோ பங்கு பெற்று மக்கள் மனதை கவர்ந்து எளிதில் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.அந்த வகையில் சின்னத்திரையில் நயன்தாரா முதல் ப்ரியாபவானி சங்கர் என பலர் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல தமிழில் உள்ளனர்.மேலும் அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிறுவனம் விஜய்டிவி.இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது.
அதில் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை அந்நிகழ்ச்சி கொண்டுள்ளது.மேலும் அதில் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகை பவித்ரா.இவர் அந்நிகழ்ச்சியின் மூலம் இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.
இந்நிலையில் குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற சிலருக்கு வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியுள்ளது.அவ்வாறு இருக்க தற்போது பவித்ரா அவர்களுக்கும் பிரபல முன்னணி காமெடி நடிகர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.மேலும் அதன் அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பவித்ரா மற்றும் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க போகிறார்கள்.மேலும் அப்பதிவை கண்ட பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜன் அவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
— Natarajan (@Natarajan_91) April 7, 2021