தற்போது இருக்கும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வருகிறார்கள்.மேலும் சின்னத்திரையில் தங்களின் அற்புதமான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் நம் அனைவர்க்கும் தெரிந்த மிகவும் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார்.மேலும் இப்போது எல்லாம் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகர்களுக்கே மக்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே கூறலாம்.அந்த வகையில் விஜய்டிவி நிறுவனத்தில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் கண்டிப்பாக வெள்ளித்திரையின் வாய்ப்பு கதவை தட்டி விடும் அந்த அளவிற்கு பிரபல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இதில் சீரியல் தொடர்கள் தற்போது பல புது விதமான கதை காலத்தோடு மக்கள் மிக ஆர்வமாக கண்டு கழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதில் ஒளிபரப்பான மக்களை வெகுவாக ஈர்த்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நிகழ்ச்சியாக வளம் வருகிறது.மேலும் அதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தனது சமையல் திறமைகளை வெளிகாட்டி வருவார்கள்.மேலும் அவர்களுடன் இணைந்து நடித்து வந்த கோமாளிகள் மக்கள் சிரிக்க வைத்து வந்தார்கள்.
அதில் மக்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகளான புகழ் மற்றும் பாலா இருவரும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பபுகழின் உச்சிக்கே சென்றார்கள் என்றே கூறலாம்.இதற்கிடையில் புகழ் அவர்கள் சற்று குண்டாக இருந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் உடல் இடையை குறைத்துரசிகர்களுக்கு ஷாக்கொடுத்ததை போல புகழ் அவர்களும் ஒல்லியாக படு ஸ்டைலாக மாறியுள்ளார்.மேலும் அந்த புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.