தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் பல நிகழ்சிகள் மக்களின் வரவேற்பை பெற்று வெற்றி நிகழ்ச்சியாக வளம் வருகிறது.அதே போல் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் மக்களுகாக இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டு வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கிறது.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியானது 2019 ஆம் ஆண்டு முதல் சீசன் வெளியாகி அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெளியானது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்களை அழைத்து வந்து அவர்களது சமையல் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியாகும்.மேலும் இதில் சிறப்பமசமாக இருந்து வருவது இதில் பங்கு பெற்று விளையாடி வரும் போட்டியாளர்களுக்கு உதவும் வகையில் இதில் பல காமெடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கோமாளியாக கலந்து கொண்டு வருகிறார்.இதில் மக்களை கவர்ந்த போட்டியாளராக இருந்து வருபவர்கள் புகழ் ஷிவாங்கி சுனிதா மணிமேகலை பாலா என பலர் உள்ளனர்.
இதில் புகழ் அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை புடித்த நிலையில் அதே ஷோவில் கோமாளியாக இருக்கும் ஷிவாங்கி நமக்கு ஏற்கனவே தெரியும்.இவர் பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சயில் பாடகியாக கலந்து கொண்டார்.மேலும் அந்த நிகழ்ச்சியில் தனது இனிமையான குரலின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சிவாகார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார்.மேலும் அதில் அவர் கூறுகையில் உங்க எல்லார் கூடவும் படம் பண்ணுவேன் என கூறி இருந்தார்.மேலும் அவர் சொன்னதை போலவே கோமாளி ஷிவாங்கி அவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும் இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.
🎭Welcome on-board @RJVijayOfficial & #Sivaangi for our #DON 💥@Siva_Kartikeyan @KalaiArasu_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial #Munishkanth @Bala_actor @kaaliactor @LycaProductions @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/l3pAXRnO13
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 10, 2021