சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் பெரும் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.கோமளிகளான புகழ் மணிமேகலை ஷிவாங்கி பாலா என தங்களது நகைச்சுவையின் மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள்.மேலும் அதனை தொடர்ந்து இதன் கோமாளிகள் அனைவரும் தற்போது வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இதில் இளசுகளின் மனதை கொள்ளைக்கொண்டவர் பவித்ரா.இவர் அந்நிகழ்ச்சிக்கு முன் சில குறும்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடித்து வெளியான சீரியல் தொடர்களான ரெட்டைவால் குருவி சீரியல் தொடரிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் பிரபல காமெடி நடிகர் சதீஷ்வுடன் இணைந்து தற்போது படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.ரசிகர்கள் பவித்ராவை சமந்தாவுடன் ஒப்பிட்டு பேசி வந்தார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தற்போது தெறி பட சமந்தாவை போல உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி பவித்ராவா இது?? அடேங்கப்பா சமந்தா தங்கச்சி போல இருகாங்க!! வெளியான புகைப்படம்!!...