தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வரை ஓடி வருகிறது.மேலும் இதில் மூன்று சீசன் கள் முடிந்து நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி கொண்டுள்ள இந்த நிலையில் அந்த பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக களம் இறங்கி அளவில்லா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை லாஸ்லியா.இவர் அந்த வீட்டில் இருக்கும் போது எண்ணற்ற ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் எனபது நம் அனைவர்க்கும் தெரியும்.
மேலும் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பால் காலமானார் என்னும் செய்தியானது மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் லாஸ்லியா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது தந்தையை பற்றி கண்ணீர் மல்க கூறியது.மேலும் அவரை சிறு வயது முதல் நேரில் பாக்க முடியாமல் தவித்து வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் அதில் அவர் வீட்டிற்குள்ளே சென்று மகளை தனது அன்பால் அரவணைத்தது பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்கள் கண்ணில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த காட்சியாக இருந்து வருகிறது.இந்நிலையில் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த இயக்குனர் சேரன் அவர்கள் லாஸ்லியாவிற்கு அவர் பிக்பாஸ் தந்தை ஆனார்.லாஸ்லியா அவர்களும் அவரை செல்லமாக சேரப்பா என்று தான் அழைத்து வந்தார்.
இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரணத்திற்கு இயக்குனர் சேரன் வெளியிட்ட உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அதில் அவர் கூறுகையில் எப்படி தாங்குவாய் மகளே உன் தந்தை மீது நீ வைத்து இருந்த அன்பு எவ்ளோ வைத்து இருந்தாய் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.மேலும் அந்த பதிவை கண்ட ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.