ஆட்டோவில் இருந்த படி காதல் பட நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்-சோகத்தில் ரசிகர்கள்

0
148

தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்களின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது காதல் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த பாபு அவர்கள் காலமானார்.மேலும் இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இந்த செய்தியானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் காதல்.இப்படத்தில் பிரபல நடிகரான பரத் அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் இதில் பல தமிழ் சினிமா நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தை பாலாஜி சக்திவேல் அவர்கள் இயக்கியுள்ளார்.மேலும் காதல் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் பாபு.இவர் அப்படத்தில் இவர் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர் விருச்சககாந்த்.அப்படத்தில் நடித்தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் விஜய் படமான வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளனர்.மேலும் இவரின் தாய் மற்றும் தந்தையின் மறைவினால் இவர் மணஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.மேலும் இவரின் வீடியோ பதிவு மூலமாக சிலர் பாபு அவர்களுக்கு உதவி செய்து வந்தனர்.இந்நிலையில் நடிகர் பாபு அவர்கள் ஆட்டோவில் படுத்திருந்த படி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.மேலும் இச்செய்தியை அறிந்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here