தற்போது பல நிறுவனங்கள் சின்னத்திரையில் சீரியல் தொடரில் தவிர்த்து பல ரியாலிட்டி ஷோகளை நடித்து வருகிறார்கள்.அதில் பல நிகழ்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அடுத்து அடுத்து பாகங்களை எடுக்கிறார்கள்.அந்த வகையில் மக்கள் மத்தியில் காமெடி நிகழ்சிகளுக்கு என்றுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வந்த கலக்க போவது யார் நிகழ்ச்சியில் பல திறமையான காமெடி நடிகர்களை கண்டறிந்து அவர்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகிறார்கள்.அதில் பல சீசன்கள் பல புது விதமான கலைஞர்களை சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் கலக்க போவது யாரு சீசன் 9 யில் போட்டியாளராக களம் இறங்கியவர் தான் சரத்.இவர் அச்சு அசலாக தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் காமெடியன் கதாபாத்திரத்தில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான மொட்டை ராஜேந்திரன் போலவே இருப்பார்.
மேலும் நகைச்சுவையான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரத்.இவருக்கு தற்போது திருமணம் நடக்க விருகிறது.அதுவும் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதனை கண்ட ரசிகர்கள் அவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்த லாக்டவுன் சமயத்தில் அணைத்து சுப நிகழ்சிகளும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ பல பிரபலங்களுக்கு சத்தமில்லாமல் நடந்து வருகிறது.அந்த வகையில் தற்போது சரத் அவர்களுக்கு திருமணம் ஆகும் செய்தியை கண்ட ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை கலக்கபோவதுயாரு புகழ் சரத்திற்கு நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்?? அட மணப்பெண் யார் தெரியுமா!! புகைப்படம் உள்ளே!!