தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இதில் பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் சில்க்ஸ்மிதா இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை. அந்த வகையில் ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத்கான். பல வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத்கான்.
இவர்முதன் முதலாக 2002ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும் அல்லது குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுபவர் ஆகவும் தான் நடித்துள்ளார்.
இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த “பௌர்ணமி நாகம்” எனும் திரைப்படம் தோல்வியடைந்த காரணத்தினால் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் தமிழில் பொன்னியின் செல்வன்,தலைநகரம், போக்கிரி, மருதமலை,வில்லு,கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடத்திலும், குத்துபாட்டுக்கு நடனம் ஆடியும்,நடித்துள்ளார்.
நடிகை முமைத்கான் கடந்த சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். அதன்பின் இடையில் இவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைக்கு உள்ளானார். பிறகு பெரிய தலைகளின்தலையீடு காரணமாக அந்த சர்ச்சையில் இருந்து தப்பித்தார் முமைத்கான்.உடல் எடை கூடியதால் இவருக்கு படவாய்ப்புகளும் குறையத் துவங்கியது.இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முமைத்கான். பார்ப்பதற்கு கிரன் அவர்களின் தங்கை போல் உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.