கொரோனவால் உயிர் இழந்த பிரபல இளம் நடிகர்-சோகத்தில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள்.

0
150
manjunath

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் நோயான கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரையும் பாதுக்காக்கும் விதமாக அரசாங்கம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இந்நோயின் தாக்கம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது.தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.மேலும் தமிழகத்தை அடுத்து பிற மாநிலங்களில் இந்நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.மேலும் இந்த கொரோனா நோயினால் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சிகிச்சை பலனின்றி பலர் இறந்தும் போயுள்ளர்கள்.இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் மறைவும் நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.இப்படி ஒரு நிலையில் கன்னட இளம் நடிகர் ஒருவர் காலமானார்.மேலும் இச்செய்தியானது தற்போது சாண்டல் வூட் சினிமா வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னட நடிகரான மஞ்சுநாத் அவர்கள் சம்யுக்தா 2 படத்தை தயாரித்தும் அதில் நடித்தும் இருந்தவர் 35 வயதில் காலமானார்.மஞ்சுநாத் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமைதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.மேலும் இவரின் மறைவு சாண்டல்வூட் சினிமா துறையில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.மேலும் அவரின் மறைவை ஒட்டி பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here