தமிழ் மக்கள் மத்தியில் பல சீரியல் தொடர்கள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் மக்களுக்காக பல புது விதமான கதைக்களத்தை கொண்ட பல சீரியல் தொடர்கள் தமிழில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் ஒரு சில சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்து விடுவதுண்டு.அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் புடித்தமான சீரியல் தொடராகவே இருந்தது இந்த மெட்டி ஒலி தொடர்.மெட்டி ஒலி தொடர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் 2002ஆம் ஆண்டு ஒளிபரப்பியது.மேலும் இத்தொடரில் பல சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இதில் நடித்த பிரபலங்களான போஸ்வெங்கட் நீலிமாராணி திருமுருகன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் இடம் பெற்ற பாடலான அம்மி அம்மி அம்மி மிதித்து பாடலில் நடனமாடிய சாந்தியை அவ்வளவு எளிதாக மறக்க வாய்ப்பில்லை.
நடிகை சாந்தி அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் நடிப்பில் வெளியான படம் பாட்ஷா.அப்படத்தில் இடம் பெற்ற ஆட்டோகாரன் பாடலில் இவர் நடனமாடி இருப்பார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறையிலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.சாந்தி அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சாந்தி அவர்கள் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்னும் தொடரின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
Home சின்னத்திரை பல வருடங்கள் கழித்து மீண்டும் பிரபல தொலைக்காட்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த மெட்டி ஒலி சாந்தி!! அதுவும்...