தமிழ் வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறார்கள்.அதுவும் தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் அப்போது எல்லாம் சீரியல் தொடர்கள் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.அந்த வகையில் தமிழ் சீரியல் தொடர்கள் பல இப்போது ஒளிபரப்பு ஆனாலும் முன்பு இருந்த சீரியல் தொடர்கள் தான் அன்று இருந்த மக்களுக்கு மிகவும் புடித்தமாக இருந்தது.இந்நிலையில் அவ்வாறு மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தொடரான 2010 ஆம் ஆண்டு வெற்றிதொடராக ஓடிய நாதஸ்வரம் தொடர்.நாதஸ்வரம் சீரியல் தொடரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பானது.மேலும் அதில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கீதாஞ்சலி.இவர் நாதஸ்வரம் தொடரில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
மேலும் இவருக்கு அதன் பிறகு இவருக்கு வரிசையாக தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் என்னும் தொடரில் நடித்து வந்தார்.அத்தொடரும் முடிவடைந்த நிலையில் இவர் தற்போது எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் நடிகை கீதாஞ்சலி அவர்கள் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.தற்போது நடிகை கீதாஞ்சலி அவர்களுக்கு திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் அவரது அண்மைய புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.