உலக மக்களின் அன்றாட அவரது வாழ்கையில் ஒரு அங்கமாக தற்போது இருந்து வருவது இந்த மொபைல் போன் தான்.அதுவும் தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர் ஒருவர் கூட இல்லை.அணைத்து மக்கள் கையிலும் ஒரு போன் இருக்க தான் செய்கிறது.அதிலும் பல மொபைல் கம்பெனிகள் பல புது புது அம்சங்களுடன் பல விதமான மொபைலை தயாரித்து அதனை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு காலத்தில் நோக்கியா மொபைல் போன் அதுவும் பட்டன் டைப் மொபைல்களை வைத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற கம்பெனியாக இருந்து வந்தது.அந்நிறுவனம் தற்போது காலத்திற்கு ஏற்றார் போல அவர்களும் தங்களது போன்களை அப்டேட் செய்து வருகிறது.

இதில் தற்போது நோக்கியா நிறுவனம் ஒரு புது அண்ட்ரைடு போன்களை தயாரித்து வருகிறது.அதில் குறிப்பாக நோக்கியா 3.4 ஜி என்னும் மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய விருகிறது.அதில் பல சிறப்பு அம்சங்கள் வாய்ந்த போனாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்து வருகிறார்கள்.

நோக்கியா 3.4 மற்றும் 2.4 மாடல்களை வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகார்பபூர்வமாக அறிவிக்க போகிறார்கள்.அந்த போனில் உள்ள அம்சங்களை பற்றி கீழே பார்க்கலாம்.நோக்கியா 2.4., 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரைஇன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC என்னும் ப்ரோசெச்சொர் மூலம் இயங்க போகிறது என தகல்வல்கள் வெளியாகி வருகின்றனர்.