திரைத்துறையில் அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் வளர்ந்த பிறகு பெரிய கதாநாயகிகளாக உருவாவது உண்டு. ஆனால் சமீப காலமாக திரைத்துறையில் அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரங்களின் செயல்பாடுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விசுவாசம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித் அவர்களுக்கு மகளாக நடித்தவர் பேபி அனிகா.இவர் சமீப காலத்தில் இவரது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில்வெளியிட்டு இணையத்தைப் அதிர வைத்தார். இவரைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் அறிமுகமானகுழந்தை நட்சத்திரம் எஸ்தரும் இவரது வழியைபின்பற்றுகிறார்.மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அணில்.இவரது நடிப்பு நன்றாக இருந்ததால்த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலுக்கு மகளாக இவர்தான் நடித்தார்.குழந்தை நட்சத்திரமாக நடித்து சலித்துப் போய் விட்டதோ என்னவோ! கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போல! சமீபகாலமாக பேபி அனிகா போல இவரும் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அக்மார்க் கதாநாயகிகள் போல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.
நம்ம பாபநாசம் மீனுகுட்டியாஇது என்று சிலரும், என்ன சிம்ரன் இதெல்லாம் என்பதுபோல் சிலரும், இவரது புகைப்படத்தை விமர்சித்து வருகின்றன. இந்த 2K கிட்ஸ் தொல்லை தாங்கவில்லை என்று 90s கிட்ஸ் புலம்புகின்றனர்.