ஏழை மாணவியின் மருத்துவ படிப்பிற்கு உதவிய பிரபல நடிகர்?? அந்த மாணவியின் கனவு உங்களால் தான் நிறைவேறியது!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
309

நடிகர்கள் சினிமாவில் நடிப்பது மட்டுமே செய்து வந்த நிலையில் பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை ஏழை மக்களுக்கு செய்து வருபவர்களும்.அதே போல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் அகரம் என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு செய்து வரும் உதவியை மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.மேலும் இவர் அந்த நிறுவனத்தின் மூலம் பலாயிரம் மாணவர்களை படிக்க வைத்துள்ளார்.அந்த வகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சத்தமே இல்லாமல் பலருக்கு உதவிகரம் நீட்டி வருகிறார்கள்.அந்த வகையில் சிறு வயது முதலே தங்களது கனவுகளை அதாவது பல மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆசை பட்டு பலரும் மக்களுகாக சேவை செய்ய வேண்டும் என ஆசை கொண்டு உள்ளார்கள்.மேலும் அதில் தற்போது மாணவர்களுக்கு பெரும் கடினமாக இருந்து வருவது இந்த நீட் தேர்வு தான்.நீட் தேர்வு மூலம் மாணவர்கள் படும் கஷ்டங்களை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.இந்த நீட் மூலம் பல மாணவர்கள் தங்களது இலட்சியத்தை அடைய முடியாமல் பல இந்த உலகை விட்டு மறைந்த மாணவி அனிதா.அவர் மறைவிற்கு பிறகு நீட் தேர்வு ரத்து செய்யகோரி பல மக்கள் போராடி வருகிறார்கள்.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவுரணியை சேர்ந்த மாணவி சஹானா அவர்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு படிப்பிற்கு கூட பணமில்லாமல் தவித்து வந்த நிலையில் பிரபல நடிகர் சிவா கார்த்திகேயன் அவர்கள் அந்த மாணவிக்கு உதவியுள்ளார்.நீட் தேர்வு எழுத சஹானா அவர்களுக்கு நீட் பயிற்சி மையத்தில் அவருக்கு அனுமதி பெற்று தந்துள்ளார்.மேலும் அவரது படிப்பிற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்று கொண்டுள்ளார்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here