மக்கள் மத்தியில் தற்போது பெரும் எதிபார்ப்புடன் இருந்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 ஆரமித்த நாள் முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மேலும் இதில் வீட்டிற்குள் ஏற்கனவே சண்டைகள், பிரச்சனைகள் சூடு பிடித்த வண்ணம் இருந்து வருகிறது.இந்நிகழ்ச்சி இதற்கு முன் நடந்து சீசன்களில் மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு இந்த நான்காவது சீசனுக்கு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.இந்நிலையில் இதில் சில போட்டியாளர்கள் ஏற்கனவே மக்கள் மனதில் இடம் பிடித்தும் இருந்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக இதில் போட்டியாளராக களம் இறங்கிய சுரேஷ் அவர்களை யாருக்கும் தெரியாத புது முகமாக இருந்து வருகிறது.அனால் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது எவருக்கும் தெரியாது.இவர் சின்னத்திரையிலும் சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.சமையல் தொடர்பான அந்த சேனல்லில் மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளார்.மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது தினமும் வெளியாகும் ப்ரோமோகளில் இவர்த முகத்தை பார்த்து பார்த்து எரிச்சலில் மக்கள் உள்ள நிலையில்,இவரின் சினிமா பக்கங்களை கேட்ட பிறகு கடும் வியப்பில் உறைந்துள்ளனர்.