தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தமிழில் தனது முதல் படமான 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.அதன் பின் தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக அணைத்து மொழிகளிலும் வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.அதே போல் இவர் கோலிவுட் துறையில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.
மேலும் நடிகை காஜல் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை இருந்து வருகிறது.மேலும் நடிகைகள் பற்றி அவ்வபோது சில செய்திகள் இணையத்தில் பரவி வரும்.
அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் அவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் என்ற செய்தியானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு சத்தமில்லாமல் நிச்சியதார்த்தம் முடிந்து விட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.
இந்த லாக்டவுன் முடிந்தவுடன் தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி வருகிறார்கள்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.எந்த அளவிற்கு செய்தியானது உண்மை என்று தெரியவில்லை,இது தொடர்பாக அவரிடம் இருந்து எந்த ஒரு மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.