தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களை அதிக அளவு கொண்ட நடிகர்களின் வரிசையில் இவரும் ஒருவர்.மேலும் தல அஜித் என்றாலே அத்தனை மக்களாக இருந்தாலும் சரி அல்லது சினிமா பிரபலங்கள் ஆனாலும் சரி அவருக்கென்று ஒரு தனி மரியாதையை வைத்துள்ளர்கள்.தனது உழைப்பால் இந்த அளவிற்கு மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் அஜித்.இவரை பற்றி பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலவற்றை பேசியுள்ளதை நாம் கேட்டுள்ளோம்.அந்த அளவிற்கு தங்கமான மனிதர் என கூறுவார்கள்.உதவி என்று யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவியை செய்து வருவர்.மேலும் இவர் செய்து வரும் உதவியை பற்றி எந்த ஒரு விஷயமும் வெளி வராது அந்த அளவிற்கு இவர் தன்னை நாடி வருபவர்களுக்கு இல்லை என்று அள்ளி கொடுப்பார்.
மேலும் இப்போது ஒரு தலையை பற்றின ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.அதில் தல அஜித் நடித்த படமான ரெட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படபிடிப்பின் போது நடந்த நிகழ்வு ஒன்றை பற்றி தகவல் வெளியாகினர்.அதில் பிரபல தெலுங்கு நடிகர் ஷஹீர் ஹைல் அவர்கள் ஒரு பேட்டியில் கூறிய போது ரெட் படபிடிப்பின் அன்று டிரைவர் ஒருவர் அஜித் அவர்களிடம் வந்து தயாரிப்பு குழுவினர் எனக்கு சரியாக சம்பளம் தருவதில்லை என கூறியுள்ளார்.
அதற்கு தல அஜித் அவர்கள் நான் என்ன செய்ய முடியும் நீங்க போய் புரொடக்ஷனில் கேளுங்க என கூறியுள்ளார்.மேலும் அதை கேட்ட டிரைவருக்கு கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டதாம்.பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் படபிடிப்பில் இருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று விட்டாராம்.தயாரிப்புகுழுவினர் படபிடிபிற்கு வாருங்கள் என கூப்பிட்டு உள்ளார்கள்.அதற்கு தல அவர்கள் நீங்கள் அவர்களுக்கு குடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுங்கள் அதன் பிறகு நான் வருகிறேன் என கூறியுள்ளார்.
உடனடியாக அந்த டிரைவர் மற்றும் சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளத்தை கொடுத்து விட்டார்கள்.மேலும் அந்த தெலுங்கு நடிகர் கூறுகையில் மற்றவர்களை பற்றி யோசிப்பதால் தான் அவரை நாம் தல என்கிறோம் என கூறியுள்ளார்.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் உதவி கேட்ட டிரைவர் “நான் என்ன செய்ய முடியும்” என தலஅஜித்?? என்ன நடந்தது தெரியுமா!!...