பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு இருந்ததை விட இந்த நான்காவது சீசன் மிகவும் சுவாரசியமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்நிகழ்ச்சியில் முதல் நாள் முதலே பல சண்டைகள், சங்கடங்கள், பாசம் என அனைத்தும் கலந்துள்ளது.மேலும் இந்த சீசன் 4கில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் ஏற்கனவே பாதி பெயர் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.இந்நிலையில் இதில் விஜய்டிவியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களை ஈர்த்த பிரபலமான அறந்தாங்கி நிஷா.
இவர் தனது காமெடி கலந்த நடிப்பின் மூலம் வெகுவாக மக்களை சிரிக்க செய்தார்.மேலும் இதில் நேற்று நடந்த எபிசொட் ஒன்றில் பலரும் தங்களைது வாழ்கையில் நடந்த மற்றும் கடந்து வந்த பாதைகளை பற்றி பேசியுள்ளனர்.அதில் பலரும் இந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார்கள் என கூறி வந்தனர்.
இந்நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் அவரது வாழ்கையில் நடந்து சோகங்களை கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் “நான் என்னோட வொர்க்க அவ்ளோ நேசித்தான்”, அதனால என்னவோ என்னோட பாப்பாவுக்கு செங்கல்பட்டு பக்கத்துல ஆக்சிடன்ட் ஆகிடுச்சு என கண்ணீர் மல்க கூறினார்.
இதனை அடுத்து அவர் அழுததை பார்த்து சக போட்டியாளர்களும் கண்ணீரில் ஆழ்த்தியது.மேலும் இந்த வீடியோவை கண்ட ரசிகர்களின் கண்ணில் கண்ணீர் தேங்கியது.அந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.