இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.எப்போதுமே திருமணம் என்றால் பல சொந்தங்கள் சூழ அவர்களின் வாழ்கை துணையை கை பிடிப்பர்.அனால் இந்த 2020 ஆண்டு நடந்து எந்த ஒரு திருமணமும் அரசாங்க விதி முறைகளின் படி சில பெயர்களை வைத்து கொண்டே இந்த திருமணம் நடந்து வருகிறதுமேலும் ஊரடங்கு காலத்தில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் வெகு விமர்சியாக நடைபெறாமல் சிம்பிள் ஆகா நடந்து வருகிறது.
அதில் பல நடிகர்களும் மற்றும் நடிகைகளின் திருமணமும் அடங்கும்.அதில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் சீரியல் நடிகராக மட்டுமல்லாமல் பல நிகழ்சிகளில் போட்டியாளராக இருந்து வந்தவர் நடிகர் சாய் சக்தி.இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.
மேலும் இவர் அதில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியல் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான குக்வித் கோமாளி யில் போட்டியாளராக களம் இறங்கி வெகுவாக மக்களை கவர்ந்தார்.இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் முடிந்தது.மும்பையை சேர்ந்த அவரது நெருங்கிய உறவினரான ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவரது திருமண நடந்து முடிந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.மேலும் சாய்சக்தி அவர்களின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மற்றும் சீரியல் துறையில் பணியாற்றும் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.