தற்போது மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு இருப்பது இந்த சீரியல் தொடர்கள் தான்.அதிலும் பல நிறுவனங்கள் பல புது விதமான தொடர்களை மக்களுகாக எடுத்து வருகிறார்கள்.மேலும் தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் மக்கள் மத்தியில் இருக்கும்.அதே போல் விஜய் நடிக்க வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதன் மூலம் வெள்ளித்திரையில் ஜொலித்து வருவதுண்டு.
இந்நிலையில் சின்னத்திரை பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடராக இருப்பது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் பல சினிமா முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தனகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகை சித்ரா.
இவர் அத்தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.மேலும் இவருக்கு திருமணம் ஆகா போகிறது என்ற செய்தியானது சமுக வலைதளங்களில் பரவி வந்தது.மேலும் அண்மையில் நடிகை சித்ரா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அருமையான ஜோடி பொருத்தம் என கமெண்ட் களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.