“சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சர்மா. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்கள் இருவருக்கும் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.அப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டது.திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு நாள் தானும் ஹீரோயினியாக ஆகிவிட வேண்டும் என்பறு ஆசை, அதே ஆசைதான் ஸ்ரேயா சர்மாவிற்கும்.இவர் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.
இவர் ஒரு வழியாக தெலுங்கில் “காயகுடு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றிப்படங்கள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார், ஸ்ரேயா சர்மா.
இவர் நன்கு படித்து வழக்கறிஞராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் வேலை செய்து கொண்டிருந்தாலும், தனக்கான ரசிகர்கள் நிறைய பேர் இருப்பதால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவா இது?? அட ஹீரோயின்கணக்கா...