2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி (SMS). இத்திரைப்படம் காமெடி மற்றும் காதல் இவ்விரண்டையும் கலந்து நல்ல ஒரு கமர்ஷியல் படமாக வெளிவந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி மற்றும் ஆர்யா என்று பலர் நடித்துள்ளனர். இப்படம் மூலம் தான் அனுயா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.கற்றது தமிழ் படத்திற்கு பிறகுதொடர்ந்து தோல்வி படங்களையே கண்ட ஜீவாவிற்கு,சிவா மனசுல சக்தி திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி காட்சிகள், மற்றும் ஜீவா மற்றும் அனுயா அவர்களின் காட்சிகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது.
இப்படத்தில் ஜீவாவிற்க்கு தங்கையாக நடித்தவர் தான் சினேகா முரளி. இவருக்கு சிவா மனசுலசக்தி திரைப்படமே முதல் மற்றும் கடைசிதிரைப்படம்.அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. சமீபத்தில் இவர் மாடல் உடை, பாப் கட்டிங் என போட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.இவர், இசை மீது ஆர்வம் கொண்டவர் போல. தனது சமூக வலைதளப்பக்கங்களில் பாடல்கள் பாடி நிறைய வீடியோக்கள் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் நின்று ஆச்சரியத்தில் உள்ளனர்.