தமிழ் சினிமா வில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்.இவரது பாடல்கள் இன்று வரை மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.சிறியவர் முதல் பெரியவர் வரை இவரது குரலுக்கு மயங்காத ஆளே கிடையாது.அந்த அளவிற்கு இவர் மக்கள் மனதில் தனது பாடல்களால் நீங்கா இடம் பிடித்து உள்ளார்.எஸ்பிபி அவர்கள் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இவரின் மறைவு தமிழ் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் ஆறாத காயமாக இருந்து வருகிறது.மேலும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் பல சினிமா பிரபலங்கள் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.பலர் நேரில் வந்தும் பலர் வீடியோ காணொளி மூலம் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில் முன்னணி பாடகர் என்ற காரணத்தால் இவரது இறுதி ஊர்வலம் மற்றும் அவரது உடலை மக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்டது.
அப்போது அந்த வாகனத்தை ஒட்டிய டிரைவர் அவர்கள் கூறிய போது ஒரு இசை மேதையின் ஆத்மாவை கொண்டு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது எனக்கு ஒரு பாக்கியம்.நான் இதுவரை இரண்டு பெயருக்கு இறுதி யாத்திரையில் டிரைவராக இருந்துள்ளேன் ஒன்று சிவாஜி சார் மற்றும் எஸ்பிபி சார்.
எஸ்பிபி அவர்களின் இறுதி ஊர்வலம் நுங்கம்பாக்கம் முதல் தாமரைப்பாக்கம் வரை இருந்தது.அவரை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் வெகுவாக கூடினர்.பொதுவாக எங்களது வண்டியை கண்டால் மக்கள் பயந்து ஒதுங்கி போவர்கள்.அனால் மக்கள் அன்று வண்டியை தொட்டு வணங்கினர்.கடைசி வரை மக்கள் கூட்டம் குறையவே இல்லை.மேலும் அவரது இறுதி சடங்குகளுக்கு நான் ஒரு தெய்வத்திற்கு செய்வதாக நினைத்து தான் செய்தேன் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.