சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தமிழ் மக்களுக்கு மத்தயில் அறிமுகமே தேவையில்லை ஏனென்றால் தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரியான பிரியங்காவுக்கு திரை பிரபலங்கள் உட்பட முன்னணி இசை பாடகர்களும் ரசிகர்கள் தான்.பிரியங்காவின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் அந்த பாடல் அப்படியே பிடித்து விடும்.இதுவே அவரின் இந்த பயணத்திற்கு கிடைத்த வெற்றி.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவின் குரலில் ஒலித்த சின்னச்சின்ன வண்ணக் குயில் என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்திழுத்தது. பிரியங்காவின் இந்த குரல் வலத்தை கண்டு வாயடைத்து போகாத பிரபலங்களே இல்லை என சொல்லலாம்.சூப்பர் சிங்கர் சீசனில் பிரியங்கா முதல் வெற்றி கனியை பிடிக்க வில்லை என்றாலும் அனைவரின் இதயத்திலும் வீடுகளிலும் முதல் இடத்தை பிடித்து விட்டார் என்பதே உண்மை.
இசை ஜாம்பவான்களோடு எஸ்.பி பாலசுப்ரமணியம் தொடங்கி வளர்ந்த வளரும் அனைத்து பாடகர்களுடனும் பிரியங்கா பாடலை பாடி வருகிறார்.மருத்துவ படிப்பை தொடர்ந்து வரும் பிரியங்கா பாடுவதை தாண்டி தற்போது மருத்துவராக மாறியுள்ளார்.பல மருத்துவராக முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டகிராமில் ஷேர் செய்துள்ளார்.
View this post on Instagram