இந்த கொரோன் லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட ஏழு மாத காலம் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி ஊரடங்கினால் வெளியே செல்ல முடியாமல் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார்கள்.அதிலும் குறிப்பாக எந்த ஒரு மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவு இருந்த நிலையில் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் திருமணங்கள் கோலாகலமாக நடக்காமல் சிம்பிளாக நடந்த வண்ணம் இருந்தது.மேலும் இதில் அண்மையில் நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு கூட மிக எளிமையாக தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணம் முடிந்தது.அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் பாடகர் விக்ரம் அவர்கள்.இவர் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக எழாவது சீசனில் கடைசி வரை வந்த பாடகரான விக்ரம் அவர்களுக்கு திருமணம் முடிந்தது.
இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் நடந்து வந்த சாம்பியன் அப் சாம்பியன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது தான் காதலித்து வந்த பெண்ணை அறிமுகம் செய்தார்.மேலும் இவர்கள் எவ்வாறு காதல் வயப்பட்டார்கள் என அந்த நிகழ்ச்சியில் கூறி உள்ளார்கள்.
மேலும் தற்போது விக்ரம் அவர்கள் சுபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதுவும் இந்த லாக்டவுணினால் சற்று சிம்பிளாக நடந்து முடிந்தது.மேலும் இதில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டார்கள்.இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
Beginning of my life journey with my better half, to be honest my Best Half❤️❤️❤️