தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தளபதி விஜய்.தென்னிந்திய சினிமா துறையில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவரே.இவர் தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் துப்பாக்கி.இப்படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இதில் கதாநாயகியாக பல தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பிரபல ஹிந்தி சினிமா துரையின் முன்னணி நடிகராக வளம் வரும் வித்யுத் ஜம்மால் அவர்கள் வில்லானாக நடித்து இருப்பார்.
நடிகர் வித்யுத் ஜம்மால் அவர்கள் ஹிந்தி மொழியில் அறிமுகமான முதல் படம் 2011 ஆம் ஆண்டு வெளியான போர்ஸ் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகர் வித்யுத் அவர்கள் நடிப்பை தாண்டி இவர் மாடலாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வித்யுத் அவர்கள் சமீபத்தில் நிச்சியதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவிற்கும் இவருக்கும் இடையில் காதல் மலர்ந்துதள்ளதாக தகவல்கள் சமுக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தனர்.ஆனால் தற்போது திருமணம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர் தனது காதலியுடன் தாஜ்மஹாலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட இணையவாசிகள் அதனை பரப்பி வருகிறார்கள்.அப்புகைப்படமனது கீழே உள்ளது.