கடந்த ஜூன் 1அன்று ஆனந்த் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ்,பிரகாஷ்ராஜ், தம்பிராமையா போன்ற ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எனிமி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.எனிமி படத்தின் கதையை விட அப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.S S தமன் அவர்களின் இசையில்இப்படத்தில் இடம்பெற்ற டம்டம் எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.இப்பாடலின் பாடலாசிரியர் விவேக் ஆவார்.
டம் டம் எனும் இப்பாடலில் ஸ்ரீவர்த்தினி,அதிதி, சத்யா யாமினி,ரோஷினி, தேஜஸ்வினி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது மேலும் இந்த பாடலில் நடனமாடி உள்ள மிருணாளினி ரவிஅனைவராலும் ரசிக்கப்பட்டார். இவருக்குப் பின் பலபேர் நடனமாடி இருந்தார்கள். அதில் பின்னணியில் டாட்டூபோட்டு நடனம் ஆடிய டான்சர் ஒருவர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார்.
அந்தப டாட்டூடான்ஸரின் பெயர் சந்திரா ஜோஷி.இப்பாடலில் கதாநாயகியை விட பின்னணியில் நடனமாடிய இந்த டாட்டூ டான்ஸர் தான் பலரையும் கவனத்தை ஈர்த்தார்.அதுமட்டுமின்றிரசிகர்கள்இவரை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு தள்ளுகின்றன.சமீபத்தில் இவரை ஒரு சேனல் பேட்டி எடுத்தது. அப்பேட்டியில் அவர் தனக்கு 19 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாகவும், இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்து விட்டதாகவும் கூறினார்.இதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.இப்பேட்டியில் இவர் நடனம் கற்று கொள்வதற்காகவே நான் என்னுடைய கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டேன், எனக்கு நடனம் என்றால் பிரியம், நடந்ததற்காக என்னுடைய வளர்ச்சியை தடுக்கும் எதுவாக இருந்தாலும் நான் விட்டுவிடுவேன், தமிழில் இன்னொரு படத்தில் ஆடி இருக்கிறேன், அதிலும் என்னை காணலாம் என்று கூறியிருந்தார். இப்படி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.