உலக மக்களை அச்சுறுத்தி வந்த விஷயமான இந்த கொரோனா நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு மாத காலமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர்.மேலும் அரசாங்கம் மக்களுகாக சில தளர்வுகளை ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வேலைகளை செய்து வருகிறார்கள்.மேலும் இந்த நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.அவ்வாறு இருக்க இந்த கொரோனா காலகட்டடத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்களை நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள்.பிரபல பாடகரான எஸ்பிபி சித்ரா சுஷாந்த் என பலர் நம்ம விட்டு மறைந்துவிட்டார்கள்.இந்நிலையில் தற்போது பிரபல பழம்பெரும் நடிகரான உன்னிகிருஷ்ணன்நம்பூத்ரி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான சந்தரமுகி பம்மல் கே சம்மந்தம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகர் பலரால் பாராட்டப்பட்டார்.
நடிகர் உன்னிக்கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.அவருக்கு மலையாள மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் பழம்பெரும் பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்!! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!