தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து நடிகரான விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்.மேலும் தமிழில் தனது முதல் படமான கோகுலத்தில் சீதை என்னும் படத்தில் அறிமுகமாகினார்.அனால் அந்த படத்தில் அவர் நடித்துள்ளார் என்பதே பாதி மக்களுக்கு தெரியாது,அதே போல் தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமான புதுபேட்டை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படமான சுந்தரபாண்டியன் படம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பின்னர் பிசா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதற்கு பின்னர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
மேலும் இவர் ஆரம்ப கால கட்டத்தில் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவர் தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.ஒரு வருடத்திற்கு மினிமம் இரண்டு அல்லது மூன்று படங்களையாவது நடித்து விடுகிறார்.மேலும் இவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகி அதில் நடித்தும் வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருடன் திருமணம் முடிந்தது.இவர் இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவருக்கும் சூரியா சேதுபதி என்னும் மகனும் மற்றும் ஸ்ரீஜா சேதுபதி என்னும் மகளும் இருகின்றனர்.இதில் அவரது மகன் சூரியா அவர்கள் இவர் நடித்து வெளியான நானும் ரவுடி தான் படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் அவரது மகன் இருவரும் இருக்கும் புகைப்படமானது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவரது மகன் முன்பு இருந்ததை விட இப்போது உடல் இடை கூடி குண்டாக காட்சியளித்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.