சின்னத்திரையை பொருத்த வரை எத்தனையோ நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க மக்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் தொலைக்காட்சியான விஜய்டிவியில் பல ரியாலிட்டி நிகழ்சிகள் ஒளிபரப்பு வருகின்றது.மேலும் அதில் என்னதான் நிகழ்ச்சியின் கதைகளம் இருந்தாலும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்கு அதன் தொகுப்பாளர்களையே சேரும்.மேலும் அவ்வாறு இருக்க அதில் தற்போது மிகவும் வெற்றி பெற்ற பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விட்டார்கள் விஜய் டிவி தொகுப்பாளர்கள்.மேலும் தொகுப்பாளர்களான டிடி தொடங்கி தற்போது உள்ள அறந்தாங்கி நிஷா வரை அனைவர்க்கும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது விஜய்டிவியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா.இவர் அந்நிறுவனத்தில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்தது இவரின் நகைச்சுவையினாலும் தனது அசத்தலான நடிப்பாலும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.பிரியங்கா அவர்கள் தற்போது ஸ்டார்ட் மியூசிக் சூப்பர் சிங்கர் என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.பிரியங்கா அவர்கள் சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்பவர்களுக்கு தெரியும்.
இந்நிலையில் கடந்து இரு தினங்களுக்கு முன்பு இவர் வாயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரின் உடல் நிலை இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பாத நிலையில் அவர் அதில் பற்றி கண்டுகொள்ளாமல் நகைச்சுவையாக பதிவை போட்டுள்ளார்.அதில் அவர் நான் விரைவில் குணமடைவேன் எனவும் அதில் இருந்து நான் மீண்டு வருவேன் என கூறியுள்ளார்.மேலும் நான் சாப்பிடுவதை பார்த்து யாரோ கண்வைத்து விட்டார்கள் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.அந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்னாச்சு?? மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!! வெளிவந்த புகைப்படங்கள்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!