தமிழ் மக்கள் மத்தியில் தற்போது பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள விஷயமான காமெடி நடிகர் விவேக் அவர்களின் மறைவு சினிமா துறையினரை மட்டுமல்லாமல் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.மேலும் விவேக் அவர்கள் தனது படங்களின் மூலம் சமுக கருத்துக்களை மற்றும் சமுக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர்.இவர் தனது காமெடியின் மூலம் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்துள்ளவர் நடிகர் விவேக்.மேலும் விவேக் அவர்கள் சினிமா துறையில் முதன் முதலில் துணை இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழில் காமெடி நடிகராக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களின் படங்களில் நடித்து அதன் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகர் விவேக்.மேலும் நடிகர் விவேக் அவர்கள் படங்களை தாண்டி இவர் சமுகத்தின் மேல் அக்கறை கொண்டவர்.
விவேக் அவர்கள் கிரீன் கலாம் என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.மேலும் இவரின் குறிக்கோளாக கோடி மரக்கன்றுகள் நடுவது தான்.ஆனால் அதை முழுவதுமாக நடிக்கமுடியாமல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இந்நிலையில் பல திரைத்துறையினர் தங்களது இரங்கலை அவர்களது சமுக வலைத்தள பக்கங்களிலும் மற்றும் நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களின் அஸ்தியை அவரது குடும்பம் பெருங்கோட்டூர் கிராமத்தில் வைத்து மரியாதையை செலுத்தினார்கள்.நடிகர் விவேக்கின் அஸ்தியை மேல் மரக்கன்றுகள் நட்டுள்ளர்கள்.அவரின் ஆசையான ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது தான்.அவரது குடும்பத்தார் அவரின் அஸ்தியின் மேல் மரக்கன்றுகளை வைத்து அவரது ஆத்மாவை குளிர வைத்துள்ளனர்.
Home சினிமா செய்திகள் மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தியை அவரது குடும்பத்தார் செய்த செயல்!! அஸ்தியை வைத்து அவரது ஆசையை...