எனது மகளின் திருமணத்திற்கு உதவிய நடிகர்-விவேக்கை பற்றி நடிகர் குமரிமுத்து கூறிய உருக்கமான வீடியோ.

0
203

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விவேக்.இவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.தமிழில் பல ஆண்டு தனது நகைச்சுவை திறமையினால் அனைவரின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் விவேக்.நடிப்பை தாண்டி நடிகர் விவேக் அவர்கள் சமுக அக்கறைகள் மேல் பெரும் ஆர்வம் கொண்டவர்.இவர் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் அவர்கள் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.இந்நிலையில் நடிகர் விவேக் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த இவர் திடீரென இவ்வுலகை விட்டு மறைந்தார்.Actor vivekhமேலும் நடிகர் விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள்.இந்நிலையில் மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் விவேக் அவருக்கு செய்த உதவியை பற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.Actor vivekhதான் கஷ்டத்தில் இருந்தாலும் தனது சிரிப்பின் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர் நடிகர் குமரி முத்து தான்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.இவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு நடித்து வெளியான படம் வில்லு அப்படத்திற்கு பின்னர் உடல்நலகுறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.மேலும் குமரிமுத்து அவர்கள் தனது 75 வயதில் காலமானார்.மூச்சு திணறல் காரணமாக நடிகர் குமரி முத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இவரின் மறைவிற்கு பல்வேறு சினிமா துறையினரும் மற்றும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும் அவரது கல்லறையில் கூட Time for god, to enjoy his laughter எனும் வாசகம் எழுதப்பட்டு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here