தமிழ் சின்னத்திரையில் வீஜேவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரபலங்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகள் தங்களது அருமையான தொகுத்து வழங்கும் திறமைகளின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பிரபல சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் பாவனா தொடங்கி மக்களை கவர்ந்த வீஜே டிடி வரை விஜய்டிவி தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.அந்த வகையில் கலக்க போவது யாரு என்னும் பிரபல காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தை தொகுத்து வழங்கியவர் வீஜே ரக்ஷன்.மேலும் அதில் இவர் மற்றும் ஜாக்குலின் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்கள்.இந்நிகழ்ச்சியானது பல காமெடி நடிகர்களை அடையலாம் கண்டு அதில் யார் சிறப்பான காமெடி நடிக்கும் திறமையை கண்டறியும் நிகழ்ச்சியாகும்.இதில் கலக்க போவது நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இந்நிகழ்ச்சி பல சீசன் தொகுத்து வழங்கியது.
அதனை தொடர்ந்து தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக இருக்கிறார் வீஜே ரக்ஷன்.இவர் மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.மேலும் அதில் அஸ்வின் அவர்கள் ரக்ஷன் உன் காதல் கதையை நீ சொல்லு என கேகையில் 8 வகுப்பில் இருந்து ஆரமித்த காதல் எங்களது திருமணம் காதல் திருமணம் தான் என கூறினார்.மேலும் தற்போது ரக்ஷன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரக்ஷன்!! ஆச்சரியமான ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்...