தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கிய மற்றும் பல படங்களை வசன கர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் உடல்நல குறைவால் காலமானார்.மேலும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் துறையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தற்போது பல சினிமா பிரபலங்களின் மரணம் மக்களால் ஏற்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.அதுவும் இந்த கொரோன நோயின் தாக்கம் மக்களை அன்றாட வாழ்க்கையை நிறுத்திய நிலையில் தற்போது சில தளர்வுகளோடு மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள நிலையில் பல சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்போது நடிகர் இயக்குனர் என பல பரிமாணங்களில் பணியாற்றிய ஈரோடு சௌந்தர் அவர்களின் மரணம் தான்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்களான முதல் சீதனம் சிம்மராசி சமுத்திரம் என பல படங்களை இயக்கியுள்ளார்.மேலும் நடிகராக இவர் தசாவதாரம் மற்றும் லிங்கா படங்களில் சிறு கதாபத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சமீபத்தில் கூட தனது பேரனை வைத்து உள்ளேன் ஐயா உள்ளேன் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.மேலும் இவர் சிறுநீரக கோளறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.இந்நிலையில் இவரின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவரின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் காலமனார்?? திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!